News Just In

5/28/2021 07:49:00 PM

திருகோணமலை- மூதூர் நகர் பகுதிக்கான அனர்த்த நிதியம் உருவாக்கம்...!!


எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூருக்கான அனர்த்த நிதியம் ஒன்றை உருவாக்கும் கலந்துரையாடல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் இடம்பெற்றது.

மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.எ. அரூஸ் உட்பட முன்னாள் பிரதேச செயலாளரும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளருமாகிய எம்.சி.எம். ஷெரீப் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர் மூதூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி, மூதூர் மஜ்லிஸுஸ் ஸுறா சபை, பள்ளிவாசல்கள் சம்மேளனம், உலமா சபை - மூதூர், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், வர்த்தக சங்கம், சமூக நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலோடு இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது சபையோரினால் மூதூர் நகர்ப்பகுதிக்கான அனர்த்த நிதியம் உருவாக்கம் தொடர்பாகவும் அதன் கட்டமைப்பு தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டு முன்னாள் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் எம்.சி.எம். ஷெரீப் அவர்களின் தலைமையில் பதினாறு பேர் உறுப்பினர்களைக் கொண்ட தற்காலிக செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்போது சபையில் கலந்துகொண்டோரினால் இந்நிதிய உருவாக்கத்திற்காக ஆறு இலட்சம் ரூபாய் உறுப்பினார்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இக்குழுவினூடாக மூதூரிலுள்ள அனைத்து சமூக நிறுவனங்களினது அங்கத்துவத்தையும் உள்ளடக்கியதாக மூதூர் நகர்ப்பகுதிக்கான நிரந்தர அனர்த்த நிதியம் ஒன்றை உருவாக்கும் பணி மிக விரைவில் நடைபெறும்.

இதன் தொடராக பிரதேச செயலாளரின் தலைமையில் எதிர்வரும் 2021.05.31ஆம் திகதி திங்கட் கிழமை தோப்பூர், சம்பூர், மேன்கமம் ஆகிய பகுதிகளுக்கும் அதன் அருகிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இணைத்து இவ்வாறான அனர்த்த நிதியம் உருவாக்கப்படவுள்ளது எனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டதாக மூதூர் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.





No comments: