News Just In

5/20/2021 02:19:00 PM

சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!!


இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை மீண்டும் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் இதனை எமது செய்தி பிரிவுக்கு உறுதிப்படுத்தினார்.

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

5ஆம் தரப் புலமைப்பரிசீல் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 3ம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2021ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: