அதன் பிரகாரம் வீடுகளில் இருந்து தமிழின அழிப்பு நினைவேந்தலை மேற்கொண்டவாறு சூம் (ZOOM) இணைய செயலி ஊடாக இணைந்து கூட்டுப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் இந் நிகழ்வு
நேற்றைய தினம் இரண்டு மணி நேரங்களுக்கும் அதிகமாக இடம்பெற்றிருந்தது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
முற்பகல் 10.30 மணிக்கு அனைவரும் இணைந்து இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களின் ஆத்ம சாந்திக்காக இரண்டு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
முற்பகல் 10.32 மணிக்கு அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறு சமநேரத்தில் கூட்டாக சுடரேற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உரைகள் இடம்பெற்றன.
உரைகளைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனவழிப்பு யுத்த காலத்தில் பட்டினிசாவுக்கு தள்ளப்பட்டிருந்த மக்கள் தமது உயிர்களை காத்துக் கொள்வதற்காக அரிசிக் குறுணலை நீரில் அவித்து கஞ்சியாக உண்டு உயிரைக் காத்துக் கொண்ட அனுவபத்தை மீள நினைவு படுத்தும் முகமாக அனைவரும் கஞ்சியை பரிமாறிக் கொண்டார்கள்.
இணையவழி நிகழ்வில் இனவழிப்பினை நினைவு கூரும் வகையிலும், இனவழிப்புக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி அனைத்து தமிழ் சிவில் மற்றும் அரசியல் தரப்புக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினை வலியுத்தும் உரைகளும் இடம்பெற்றிருந்தன.
பாராளுமன்ற உறுப்பினர் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பச்சைத் தமிழகம் கட்சியின் சேவகர் திரு,சு.ப.உதயகுமாரன்,
முன்னாள் கிரு பத்திரிகை ஆசிரியர், தற்போது ஜேர்மனியிலிருந்து ஜே.டி.எஸ் அமைப்பின் செயற்பாட்டாளராகவும் பணியாற்றி வருகின்ற திரு.பாசன அபயவர்த்தன, Prof. JUDE LAAL - An Associate professor and the director of Trinity Center for Post-Conflict Justice, at the Trinity College Dublin, Ireland, தற்பொழுது ஸ்வீடன் நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறவரும், ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் தமிழீழ மக்களின் தமிழ் கல்விக் கழகங்களில் ஆசிரியராகவும் தொடர்ந்து சேவை புரிந்து வருகிறவருமான முனைவர் விஜய் அசோகன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மகளீர் அணிச் செயலாளர் திருமதி.கிருபா கிரிதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











No comments: