News Just In

5/19/2021 02:23:00 PM

கொழும்பு துறைமுக நகரில் ஏற்படுத்தப்படும் வேலைவாய்ப்புகளில் 75% மானவை இலங்கையர்களுக்கு- பிரதமர்!!


கொழும்பு துறைமுக நகரில் ஏற்படுத்தப்படும் வேலைவாய்ப்புகளில் 75% மானவை இலங்கையர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளைக் கொண்டு வர எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கான சிறப்பு திறன்கள் இலங்கையருக்கு இல்லாத போது குறித்த விதிமுறைகளை தளர்த்துவதற்கு ஆணைக்குழு இடம் அளிக்க வேண்டும் என பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவில் பெரும்பான்மையானவர்கள் இலங்கையர்களாக இருக்க வேண்டும் எனவும் அதன் தலைமை இலங்கையருக்கு கிடைக்க வேண்டும் எனவும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை சட்டமூலத்தில் உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

No comments: