News Just In

5/02/2021 09:27:00 AM

நேற்று மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 687ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கொவிட் 19 தொற்றால் நேற்றைய தினம் (01) 09 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செயதுள்ளதுடன், அதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 687 ஆக பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய,

01.கரதான பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர், ஹொரன ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 ஏப்ரல் 29 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 மார்புத் தொற்று மற்றும் நாட்பட்ட ஈரல் நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

02.அவிஸ்ஸாவெல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், கோப்பாய் கொவிட் சிகிச்சை நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 ஏப்ரல் 30 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 உடன் சிக்கலடைந்த மோசமான குருதிக் குழாய் தொற்று மற்றும் மாரடைப்பு நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

03.ருவன்வெல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், முதலில் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஜெயவர்த்தனபுர பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டு 2021 ஏப்ரல் 28 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

04.தேவாலகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய பெண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 ஏப்ரல் 30 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட சுவாசக் கோளாறு நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

05.மாவனல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 79 வயதுடைய ஆண் ஒருவர், வரகாபொல ஆதார வைத்தியசாலையில சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 ஏப்ரல் 30 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். மோசமான நாட்பட்ட நுரையீரல் அழற்சியுடன் தீவிர கொவிட் நியூமோனியா, நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்காளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

06.யக்வில பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 33 வயதுடைய ஆண் ஒருவர், அம்பன்பொல சிகிச்சை நிலையத்தில் இருந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 ஏப்ரல் 30 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நியூமோனியா மற்றும் புதிதாக கண்டறியப்பட்ட நீரிழிவு நிலைமையால் மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

07.வலப்பன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 57 வயதுடைய ஆண் ஒருவர், ரிகில்லகஸ்கட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 ஏப்ரல் 30 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். மோசமான சுவாசக் கோளாறு, கொவிட் நியூமோனியா மற்றும் குருதி நஞ்சானமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

08.இரத்தினபுரி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய ஆண் ஒருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 01 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சியுடன் குருதி உறைதல், கொவிட் நியூமோனியா, மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை, நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

09.குளியாப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய ஆண் ஒருவர், குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 ஏப்ரல் 30 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: