News Just In

5/24/2021 07:44:00 PM

மஜ்மா மேற்கில் ஜவ்பர் அவர்களின் 3 ஏக்கர் நிலத்தை தாண்டியும் குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்யப்படும் கொரோனா ஜனாஸாக்கள்...!!


மஜ்மா மேற்கு தரசேனை குடியிருப்பு பூமியில் கொரோனா 19 மரணம் அடைந்தவர்கள் நல்லடக்கம் செய்யபடுகின்றது யாவரும் அறிந்த விடயம்.இதனால் எங்களுக்கு ஏற்பட்டு கொண்டு இருக்கின்ற பாதகமான நிலைமையை இதில் முன் நின்று செயற்படுத்தகின்ற பிரதேச சபையோ, இதில் சம்பந்தப்பட்டவர்களோ இதனுடைய உண்மைத் தன்மையை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று பாதிக்கப்பட்ட விவசாயி எம்.ஏ.முகைதீன் தனது முகப்பத்தகத்தில் பதிவிட்டள்ளார்.

01. இவ்விடத்தில் யுத்தத்திற்கு முன்னைய காலத்தில் எமது மக்கள் குடி இருந்தனர்.1971ம் ஆண்டு அம் மக்களுக்காக ஏ.ஊ.ஓட்டமாவடி என்ற பெயரில் ஒரு கிணறு கட்டி கொடுக்கப்பட்டது. கிணற்றுக்கும் கொரோனா 19 ஜனாஸா அடக்கும் இடத்திற்கும் இடையில் உள்ள தூரம் 200ஆ ஆகும். இங்கு இந்திய இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் இங்கிருந்த மக்கள் தமது உடமைகளை இழந்து ஏனைய பிரதேசங்களுக்கு அகதிகளாக சென்றனர்.அந்த துப்பாக்கி ரவைகளின் துளைகளை கிணற்றில் காணலாம்.

02. 1979ம் ஆண்டு வீசிய சூறாவளியால் இவ் விடத்தில் ஒரு குழந்தை நீரில் மூழ்கி உயிர் இழந்தது. அந்த குழந்தையின் தாய் தற்போதும் உயிருடன் உள்ளார். யுத்தத்திற்கும் பின்னர் இங்கு குடி இருந்த மக்கள் தங்களுடைய காணிகளை சுத்தம் செய்து மேட்டு நிலப் பயிர் செய்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.தற்போது உழஎனை 19 ஜனாஸாக்கள் அடக்கப்டுகின்ற காணி இந்த மக்களுடைய காணிதான். இதில் வேடிக்கை என்னவென்றால் ஜானாசா அடக்கம் செய்வதற்காக விடப்பட்ட 10 எக்கர் காணியில் இது வரை ஒரு கொவிட் 19 ஜனாஸா கூட இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை. மாறாக மக்களின் குடியிருப்பு நிலங்களிலேயே தற்போது ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் இம் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு அவர்களுடைய நிலங்களையும் இழந்து வருகின்றனர்.

03. கொவிட் 19 ஜனாஸா அடக்கம் செய்வதற்காக இந்த இடத்தில் விவசாயிகள் தங்களுடைய தொழுகைக்காக பயன்படுத்திய பள்ளிவாயலும் இல்லாமல் ஆக்கப்பட்டது.அதே நேரம் இவ் விதத்தில் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த ஒரு குடும்பம் உடனடியாக வெளியேற்றப்பட்டது.பாவம் அந்த குடும்பத்தினர் ஏழை.அதனால் இந்த துயரத்தை யாரிடம் போய் சொல்லி நீதி கேட்பது என்று தவிக்கின்றனர்.இது வரை அக் குடும்பத்துக்கு இருப்பதற்கு மாற்று காணி கூட கொடுக்கப்படவில்லை.இருந்த இடத்தை விட்டு 500ஆற்கு அப்பால் வாழ்ந்து வருகின்றனர்.இக் குடும்பம் இருந்ததை சகோதரர் . சமீம் உம் அறிவார். இது இப்படியே தொடரும் ஆனால் எமது நெற்செய்கை காணிகளையும் நாங்கள் மைய வாடி காணிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் போல் உள்ளது.இதனால் எமது நிலங்களையும் இழந்து எமது வாழ்வாதாரத்தையும் இழக்க நேரிடும்.

எனவே சம்மந்தப்பட்டவர்கள் இனிமேலும் தாமதிக்காமல் இதற்குரிய மாற்று வழியை மேற்கொள்வதோடு இதில் தங்களுடைய குடியிருப்பு நிலங்களை இழக்கின்றன மக்களுக்கு மாற்று காணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு இதனால் குடியிருப்பை இழந்து நிற்கின்ற அந்த குடும்பத்தை உடனடியாக அவர்கள் இருப்பதற்கு அவர்களுக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் யாராரிடம் நீதி கேட்டார்களோ அந்த வீடியோவை பதிவிட வேண்டிய நிலை ஏற்படும்.







No comments: