News Just In

5/19/2021 07:29:00 AM

இந்தியாவிலிருந்து 35 பேருடன் வந்த விமானம்- வந்தவர்கள் தனிமைப்படுத்தலில்...!!


இந்திய விமானம் ஒன்று 35 பேருடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்த விமான இலங்கை வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புதுடெல்லியில் இருந்து வருகைதந்துள்ள ஏர் இண்டியா விமான சேவைக்கு சொந்தமான இவ்விமானத்தில் 19 இலங்கையர்களும், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் 16 உத்தியோகத்தர்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் பரவல் அதிகரித்துள்ளதால் இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சின் விசேட அனுமதியுடன் இந்த விமானம் இலங்கை வந்துள்ளது.

இவ்வாறு வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments: