News Just In

5/13/2021 07:24:00 AM

யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி...!!


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கல்வி பயின்றுவரும் 31 மாணவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பம்பைமடுவில் அமைந்துள்ள குறித்த வவுனியா வளாகத்தின் மாணவர் விடுதியில் நேற்று (புதன்கிழமை) சுகாதாரப் பிரிவினரால் அன்ரிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பரிசோதனையின் முடிவுகளின்படி, 31 அங்கு தங்கியுள்ள 31 மாணவர்ககுக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்க்ள அனைவரும் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதுவரைக்கும் வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு குறித்த மாணவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

No comments: