News Just In

5/13/2021 07:35:00 AM

மூன்று மாவட்டங்களுக்குட்பட்ட 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில்...!!


இலங்கையில் 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, கம்பஹா மாவட்டம், திவுலபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலுகஹவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், காலி மாவட்டம் அஹங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரதுன்கொட, கோவியபான, கஹவன்னகம, தொம்மன்கொட ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், காலி மாவட்டம் ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, லணு மோதர, போனவிஸ்டா, கட்டுகுருந்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டம், பெல்மதுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, தெனவக பாதகட மற்றும் திப்பிட்டிகல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, குருவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தெல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட நகர பகுதி ஆகியன, உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டில் 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொழும்பு மாவட்டம் பாதுக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உக்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும், அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெஹியத்தகண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன, உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும், நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போடைஸ் தோட்டம் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட கோனகல்ல பிரிவு மற்றும் 30 ஏக்கர் பிரிவு ஆகியன உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: