News Just In

5/20/2021 06:43:00 PM

இன்று மேலும் 2780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த எண்ணிக்கை 154123ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 780 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆயிரத்து 165 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 29 ஆயிரத்து 540 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 26 ஆயிரத்து 760 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: