News Just In

5/04/2021 09:58:00 PM

சுவசரிய இலவச அம்பியூலன்ஸ் சேவைக்கு மேலும் 112 அம்பியூலன்ஸ் வாகனங்களை உள்வாங்குவதாக அறிவிப்பு !!..


 கொவிட் - 19 வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் 1990 - சுவசரிய இலவச அம்பியூலன்ஸ் சேவை மிகமுக்கிய பங்காற்றிவருகின்றது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளுக்குமான சேவையை மேலும் இலகுபடுத்தும் நோக்கில், சுவசரிய இலவச அம்புயூலன்ஸ் சேவைக்கு மேலும் 112 அம்புயூலன்ஸ் வாகனங்களை உள்வாங்குவதற்கும் வயதுவந்தோருக்கான கொடுப்பனவிற்காக 5727.36 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்குமான யோசனை ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவினால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் முன்வைக்கப்பட்டது.

அவ்விரு யோசனைகளையும் செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி முழுமையான அனுமதியை வழங்கியுள்ளார்.

1990 - சுவசரிய இலவச அம்பியூலன்ஸ் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு நாளாந்தம் சுமார் 5300 இற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புக்கள் வருகின்றன.

அதேபோன்று இந்த அம்புயூலன்ஸ் சேவையின் ஊடாக நாளொன்றுக்கு 1000 இற்கும் அதிகமான நோயாளர்கள் வைத்தியசாலைகளுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. சுவசரிய இலவச அம்பியூலன்ஸ் சேவையில் 1394 பேர் பணியாற்றுவதுடன் 297 அம்புயூலன்ஸ் வாகனங்கள் மாத்திரமே உள்ளன.

இந்த சுவசரிய இலவச அம்புயூலன்ஸ் சேவையானது இந்திய அரசாங்கத்தின் 22 மில்லியன் டொலர் நிதியுதவி மூலம் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதனூடாக மக்கள் முழுமையான இலவசசேவையைப் பெற்றுவருகின்றனர். இந்நிலையிலேயே மேற்படி யோசனைக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: