News Just In

4/02/2021 09:34:00 AM

மட்டக்களப்பு- ஓட்டமாவடி OFL கிண்ணத்தை வாழைச்சேனை நியூ ஸ்டார் அணி சுவீகரித்தது!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்டமாவடி உதைப்பந்தாட்ட சம்மேளம் (OFL) நடாத்திய பத்து அணிகள் பங்குபற்றிய உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி வியாழக்கிழமை (1) ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த நியூ ஸ்டார் மற்றும் அல் - அக்ஸா ஆகிய இரு அணிகள் கலந்து கொண்டன.

இவ் இறுதிப் போட்டியில் வாழைச்சேனை நியூ ஸ்டார் அணி 3 - 0 எனும் கோல் கணக்கில் அல் அக்ஸாவை வீழ்த்தி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இந்நிகழ்வில் அதிதிகளாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன பொதுச்செயலாளர் ஜெஸ்வர் உமர், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் மட்டக்களப்பு உதைபந்தாட்ட சம்மேளன தலைவருமான மா உதயகுமார், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன மற்றும் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிக்கும் சிறந்த வீரர்களுக்கும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.





No comments: