News Just In

4/02/2021 09:18:00 AM

தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியாகவுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல்!!


தேங்காய் எண்ணெய் தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வகைகளுடன் வேறு எண்ணெய் வகைகளை கலப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் உரிய அறிவுறுத்தல் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

மேலும் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வகைகளுடன் வேறு எண்ணெய் வகைகளை கலப்பதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டில் வர்த்தமானி மூலம் அனுமதி வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments: