News Just In

4/07/2021 09:58:00 PM

மட்டக்களப்பு- காத்தான்குடி LB Finance தனியார் நிறுவன கட்டடத்தின் மீது திடீர் தீ விபத்து!!


மட்டக்களப்பு காத்தான்குடி LB Finance தனியார் நிறுவன கட்டடத்தின் மீது தீடீர் என இன்று(07) புதன்கிழமை மாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோரின் உதவியுடன் ஊழியர்களினை வெளியேற்றி தீயினை கட்டுபாட்டிற்க்கு கொண்டு வந்தனர்.

குறித்த நிதி நிறுவனம் வழமை போல இன்று மாலையில் கடமைகள் முடிவடைந்து பூட்டப்பட்டுள்ள நிலையில் சுமார் 7 மணியளவில் கட்டிடம் தீப்பற்றியது.

இதனையடுத்து அந்த பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டு மக்கள் வௌியேற்றப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸ் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் சுமார் ஒரு மணித்தியாலம் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் காத்தான்குடி பிரதேசத்திற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

குறித்த தீ பரவலானது கட்டடத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் காரணம் இதுவரை முழுமையாக கண்டறியப்படாத நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.















No comments: