News Just In

4/25/2021 08:21:00 AM

மட்டக்களப்பில் சிறுவர் சிறுமியர்களுக்கான "வினோதமான உல்லாச உலகம்" எனும் சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா திறந்துவைப்பு!!


சிறுவர் சிறுமியர்களுக்கான "வினோதமான உல்லாச உலகம்" எனும் சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா இன்று 24.04.2021 ஆந் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில் வெகு விமர்சையாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரத்தினை சிறுவர் சினேக நகரமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டங்களை மட்டக்களப்பு மாநகர சபை முன்னெடுத்துவரும் நிலையில் மட்டக்களப்பில் தனியார் முன்னிலை நிறுவனமாக பல்வேறுபட்ட சமூக நலன்புரி திட்டங்களை ஆற்றிவரும் ஆஞ்சநேயர் குறூப் ஒஃப் கம்பனியின் சமூக நலத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே குறித்த சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா அதன் பிரதித் தலைவர் எஸ்.நிரோசன் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வானது, அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமானது.

நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் கலந்துகொண்டிருந்ததுடன், சிவஸ்ரீ ஜெகதீஸ்வரக் குருக்கள், அருட்தந்தை ராஜன் ரொஹான், மெளலவி எஸ்.எச்.எம்.ரமீஸ் ஹிபீஸ், ஆஞ்சநேயர் குறூப் ஒஃப் கம்பனியின் தலைவர் இ.சண்முகராஜா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் செயலாளர் ஜெயராஜ், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இடம் பெற்ற நிகழ்வின்போது அதிதிகளின் விசேட உரைகளைத் தொடர்ந்து சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா அதிதிகளினால் நாடி வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
சிறுவர்களுக்கான அனைத்துவிதமான நவீன விளையாட்டு கூடங்கள், 3D தொழில்நுட்ப திரையரங்கு மற்றும் நவீன கேம்ஸ் என்பன அடங்களாக அமையப்பெற்றுள்ள இவ்வளாகத்தில் சுவையானதும் சுகாதார முறைப்படி செய்யப்பட்டதுமான அனைத்துவிதமான சிற்றுண்டிகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக் கூடிய அதி நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலையும் இங்கு அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.













No comments: