News Just In

4/20/2021 09:46:00 AM

மட்டக்களப்பு- ஓட்டமாவடி கோட்டத்திலுள்ள இரு பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள இரு பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் திங்கட்கிழமை (19) நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் கடிதத்திற்கமைய அதிபர் தரத்திலுள்ள அதிபர்களுக்கான இடமாற்றத்தின் பிரகாரம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் இரு அதிபர்களும் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மீராவோடை - பதுரியா நகர் அல் மினா வித்தியாலயத்திற்கு எம்.ஐ.உபைத் அவர்களும் பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு எல்.ரீ.எம்.சாதிக்கீன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரு பாடசாலைகளிலும் தங்களது கடமைகளை அதிபர்கள் இருவரும் திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: