சீன பாதுகாப்பு அமைச்சருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இதனை தெரிவித்தார். இதன்போது, கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள காலப்பகுதியில் இலங்கைக்கு சீனா வழங்கிய உதவிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.
சீன பாதுகாப்பு அமைச்சருடன் தொடர்ந்தும் கலந்துரையாடிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை கொரோனாவின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள சூழலில், உலகளாவிய ரீதியிலுள்ள முதலீட்டாளர்களின் கவனத்தை இலங்கை நோக்கி திரும்புவதில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கை மீதான இந்த நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக சீன பாதுகாப்பு அமைச்சரிடத்தில் பிரதமர் மஹிந்த கோரிக்கை விடுத்தார்.

No comments: