News Just In

4/01/2021 10:37:00 PM

மட்டக்களப்பு- வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் மாணவ பாராளுமன்ற தேர்தல்!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைவாக மாணவ பாராளுமன்ற தேர்தல் பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் மாணவ பாராளுமன்ற தேர்தல் வியாழக்கிழமை (01) பாடசாலையில் நடைபெற்றது.

நாட்டில் ஒரு தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறதோ அதே போன்ற முறையின் கீழ் இத் தேர்தல் பாடசாலையில் நடைபெற்றது.

நடைபெற்ற மாணவ பாராளுமன்ற தேர்தலில் தேர்தர் ஆணையாளராக பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் செயற்பட்டதுடன், உதவி தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களாக ஆசிரியர்கள் கடமைகளில் ஈடுபட்டனர்.

சுகாதார அறிவுறுத்துதல்களுக்கு அமைய நடைபெற்ற இத் தேர்தலில் 78 மாணவிகள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.






No comments: