News Just In

4/27/2021 09:49:00 AM

போலி நகை தயாரிக்கும் நிறுவனம் சுற்றிவளைப்பு- இருவர் கைது!!


போலி நகை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று பியகம பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பியகம, வல்கம பகுதியில் குறித்த நிறுவனம் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (26) காலை 11 மணியளவில் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த இருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மல்வானை மற்றும் அநுராதபுரம் பகுதிகளை சேர்ந்த 48 மற்றும் 53 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments: