News Just In

4/29/2021 06:46:00 AM

சாய்ந்தமருது பொது இடங்களில் சுகாதார துறையினர் திடீர் விஜயம்...!!


நூருல் ஹுதா உமர்
நாட்டை மீண்டும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கும் கொவிட்-19 தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார துறையினர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இந் நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஜே.நிஸ்தார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதர்களும் கலந்து கொண்டு பிராந்திய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரமும், அறிவுறுத்தலும் வழங்கியதுடன், சுகாதார வழிமுறைகளை மக்கள் பின்பற்றுவது தொடர்பிலும் கண்காணித்தனர்.







No comments: