News Just In

4/08/2021 07:39:00 PM

ரஞ்சன் ராமநாயக்கவின் பதவி வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும- வர்த்தமானி வெளியாகியது!!


ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருமவின் பெயரிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி மன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இழக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.

இதன்படி, குறித்த பதவி வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருமவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையிலே, ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருமவின் பெயரிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: