கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் உள்ள பாடசாலை அதிபர்களுக்கான நிதி முகாமைத்துவம், வருட இறுதி வரவு செலவுத் திட்ட அறிக்கை தயாரித்தல் சம்மந்தமாக தெளிவூட்டும் செயலமர்வு நேற்று (31)கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் கல்விப் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு வளவாளராக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளர் வை.ஹபிபுல்லா கலந்து கொண்டு விளக்கவுரை வழங்கினார்.
இன்றைய நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் சாய்ந்தமருது,காரைதீவு,நிந்தவூர் ஆகிய கோட்ட மட்டத்தில் உள்ள பாடசாலைகளை மையப்படுத்திய அதிபர்கள் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர் என கலந்து கொண்டனர்.
No comments: