News Just In

4/29/2021 02:17:00 PM

மட்டக்களப்பு- மஞ்சந்தொடுவாயில் 35 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்த வீதி மாநகர சபையால் புனரமைக்கும் பணி ஆரம்பம்!!


மட்டக்களப்பு மாநகரின் வட்டார வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாநகர சபையினால் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் துரிதகதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

2020ஆம் ஆண்டிற்கான செயற்திட்டங்கள் அடித்தளம் இட்டிருந்த நிலையில் மழை காரணமாக பிற்போடப்பட்டிருந்தன. தற்போது குறித்த வேலைத்திட்டங்கள் முடிக்கப்படுவதுடன், புதிய வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இன்று மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்த வீதிக்கான கொங்கிறீட் இடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் உறுப்பினர்கள் ஜெயந்திரகுமார், மதன் ஆகியோர் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.









No comments: