News Just In

4/04/2021 12:59:00 PM

கூரிய ஆயுதத்தால் தாக்கி 19 வயது யுவதி உயிரிழப்பு...!!


கலேவெல, பட்டிவெல சந்தியில் நேற்று (03) மாலை 3 மணியளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: