News Just In

4/01/2021 05:06:00 PM

வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயத்தின் 12 ஆவது வருட பூர்த்தி நிகழ்வு!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தின் 12ஆவது வருட பூர்த்தி நிகழ்வு, அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் இன்று (01) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாடசாலை இலச்சினை பொறிக்கப்பட்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், பாடசாலை உருவாக்கம் மற்றும் அதன் வளர்ச்சி தொடர்பாகவும் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

நிகழ்வின் அதிதியாக கல்குடா கத்தீப் மற்றும் முஅத்தின் சம்மேளன தலைவரும், வாழைச்சேனை பதுரியா பள்ளிவாசல் பேஸ் இமாமுமான மௌலவி எம்.எல்.தாஜுதீன் கலந்துகொண்டார்.

No comments: