News Just In

3/12/2021 07:40:00 PM

இலங்கையில் முதன் முறையாக நடைபெறும் "Microsoft MCT Summit 2021" உச்சி மாநாடு!!


Microsoft நிறுவனத்தின் 2021ஆம் ஆண்டிற்கான Microsoft MCT Summit உச்சி மாநாடானது முதன் முறையாக இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ளது.

குறித்த மாநாடானது Microsoft நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்களின் இலங்கைக்கான பிரதிநிதி மனோகரராஜா விக்னராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் மார்ச் 13, 2021 தொடக்கம் மார்ச் 14, 2021 வரை நடைபெறவுள்ளது.

இலங்கையில் முதன் முறையாக நடைபெறும் இம்மாநாட்டில் பல சர்வதேச தொழில்நுட்ப வல்லுநர்களும் கலந்து கொண்டு தமது விரிவுகளை வழங்கவுள்ளனர். குறித்த தினங்களில் நடைபெறும் மேற்படி மாநாடானது தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதிக்க விரும்புவோருக்கு பயனுள்ளதாக அமையும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்வினை Youtube இனூடாக இலவசமாக பார்வையிட கீழுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

• March 13, 2021 - Live Stream
https://www.youtube.com/watch?v=WigNWsEyU18

• March 14, 2021 - Live Stream
https://youtu.be/hpmQdyZb25o

No comments: