News Just In

3/11/2021 04:38:00 PM

நதி நடந்த பாதை : அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸுக்கு தாய் மண்ணில் கௌரவம் !!


கிழக்கு மாகாண உள்ளுராட்சி, கிராம அபிவிருத்தி, கிராமிய தொழிற்துறை, சட்டமும் ஒழுங்கு, நிதி, போக்கு வரத்து, சுற்றுலாத்துறை, கட்டங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் தேசமானிய யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களின் நிருவாக சேவையில் முப்பது வருட பூர்த்தியை முன்னிட்டு சேவை நலன் பாராட்டும்,”நதி நடந்த பாதை” நூல் அறிமுகமும் இன்று வியாழக்கிமை (11) அட்டாளைச்சேனை பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் சட்டத்தரணி எம்.எஸ். ஜுனைதினின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.டீ. ஏ. நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ், தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், உதவிச்செயலாளர்கள், உள்ளுராட்சி மன்ற திணைக்கள ஆணையாளர்கள் உட்பட இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நதி நடந்த பாதை நூல் அறிமுகம் நடைபெற்றத்துடன் பொது அமைப்புக்கள், முக்கியஸ்தர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் அமைச்சின் செயலாளர் தேசமானிய யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

(நூருள் ஹுதா உமர், பி.எம்.எம்.ஏ.காதர்)







No comments: