News Just In

3/02/2021 09:20:00 AM

இன்று முதல் தனியார் பஸ்கள் நெடுந்தூர பஸ் நிலையத்தில் சேவையில் ஈடுபடாது ;தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு..!!


தனியார் பேருந்துகள், இன்று முதல் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடாது என வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க, புதிதாக திறக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்தன.

எனினும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் நேற்றைய தினம் சேவையில் இருந்து விலகி செயற்பட்டிருந்தன

இந்த நிலையில் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, நேற்றைய தினம் மாநகர முதல்வர் அலுவலகத்தில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, இலங்கை போக்குவரத்து சபையினர் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து, சேவையில் ஈடுபட இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையிலேயே, தாமும் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடப் போவதில்லை என, வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தமது சேவைகள் யாழ் நகர மத்திய பேருந்து நிலையத்துக்கு பின்புறத்திலிருந்து, வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: