News Just In

3/24/2021 04:56:00 PM

மருதமுனை அல்-மனார் மாணவர்களுக்கு வீதிப் பாதுகாப்பு மேலங்கி அன்பளிப்பு!!


(றாசிக் நபாயிஸ், மருதமுனை)
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலையின்
அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுச் செயலாளரும் பழைய மாணவருமான கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முகர்ரப் (R.D.O) அவர்ளின்
நிதியொதுக்கிட்டில் பாடசாலையின் பெண்கள், ஆரம்பப் பிரிவின் வீதிப் பாதுகாப்பு பிரிவு மாணவர்களுக்கான வீதிப் பாதுகாப்பு மேலங்கித் தொகுதி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெண்கள் ஆரம்பப் பிரிவின் பிரதி அதிபர் எம்.எம்.அனஸ், உதவி அதிபர் திருமதி.றிஸானா லுத்பி ஹுசைன், ஆரம்பப் பிரிவுப் பகுதித் தலைவர் பி.எம்.சைபுத்தீன், சட்டத்தரணி எம்.நப்ஸார் ஆசிரியர் என பலரும் கலந்து கொண்டனர்.




No comments: