News Just In

3/28/2021 06:23:00 PM

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (28) மேலும் 235 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 88,623 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 559 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் இதுவரை 91,839 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் 2,615 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: