News Just In

3/26/2021 10:33:00 AM

மட்டக்களப்பு- களுதாவளையில் இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை- கடிதமும் மீட்பு!!


இளம் குடும்பஸ்தர் தனது கைபட எழுதிய கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கல்லடி வீதி களுதாவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான (36) வயதுடைய திருச்செல்வம் மைகரன் என்பவர் தனது மனைவியினை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தனது வெற்றிலைத்தோட்டத்தில் யாரும் இல்லாத நிலையில் தனது கைபட எழுதிய கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் 'என்னை மன்னித்து விடுங்கள்,யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை' என எழுதியுள்ளார்.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







No comments: