News Just In

3/19/2021 12:44:00 PM

இலங்கையிலுள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் எல்லையற்ற இணைய வசதி!!


இலங்கையிலுள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் எல்லையற்ற இணைய வசதியை வழங்க தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துவருகிறது.

இது தொடர்பில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் அனைத்து நிறுவனங்களுடனும் கடந்த மார்ச் முதலாம் திகதியாகும் போது இந்த இணைய பெகேஜ் தொடர்பான அறிக்கை கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமக்கு கிடைக்கபெற்ற பெகேஜ் விபரங்களை மீளாய்வு செய்துவருவதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

எல்லையற்ற இணைய வசதி தொடர்பான பெகேஜ் மற்றும் கட்டண விபரம் என்பவற்றை தீர்மானித்ததன் பின்னர் ஏப்ரல் முதல் வாரத்தில் இதன் முதல கட்டத்தை வெளியிட முடியுமானதாக இருக்கும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

No comments: