காரைதீவு பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் கொவிட் 19 காலப்பகுதியில் வெளிக்கள உத்தியோகத்தர்களின் உளநலத்தை முகாமை செய்தல் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக டாக்டர் எம்.ஜே.நெளபல் கலந்துகொண்டு வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டல்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர், கிராம நிலைதாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments: