News Just In

3/24/2021 08:50:00 AM

இலங்கைக்கு எதிராக ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அமெரிக்கா தெரிவித்துள்ள கருத்து வெளியாகியது!!


இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானமானது, நீதியையும், பொறுப்புக்கூறலையும் நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சியை ஒப்புக் கொள்வதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ டெப்லிட்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தத் தீர்மானமானது, கடந்த கால உறுதிமொழிகள் மற்றும் பரிந்துரைகள் என்பன நிறைவேறவில்லை என்பதை வெளிக்காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இலங்கையானது, அனைத்து குடிமக்களினதும் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இணை அனுசரணையாளர் என்ற வகையில், இலங்கையின் நீண்டகால அமைதி மற்றும் செழிப்புக்கான அதன் அர்ப்பணிப்பை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்துவதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ டெப்லிட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: