News Just In

3/25/2021 08:14:00 AM

பாலர் பாடசாலைகளை வலுவூட்டும் செயற்திட்டம்!!


அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாலர் பாடசாலைகளை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் இன்று (24) பிரதேச சபையின் தவிசாளர் எம் ஏ ராசிக் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச சபையில் நடைபெற்றது

எதிர்வரும் காலங்களில் சகல பாலர் பாடசாலைகளும் பிரதேச சபையினுடைய அனுமதியை பெற்றிருப்பதோடு பாடசாலைக்கிடையில் காணப்படும் கட்டண வித்தியாசங்கள், கல்விக் கொள்கைகள் தொடர்பான முரண்பாடுகளை களைவதற்கும் எதிர்காலத்தில் பிராந்தியத்தில் கல்வியில் காணப்படுகின்ற குறைபாடுகளை களைந்து கல்வித்துறையை மேம்படுத்தவும் இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

கிராமங்களில் இயங்கும் பாலர் பாடசாலைகளின் மாணவர்களை அந்தந்த பாலர் பாடசாலையிலேயே கற்பித்தல் நடவடிக்கைக்காக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது எல்லோராலும் உணரப்பட்டு இந்த கலந்துரையாடலின் போது உறுதி செய்யப்பட்டது. இத்திட்டத்திற்காக பிரதேச சபை மற்றும் கல்வி சமூகத்தில் உள்ள கல்விசார் உத்தியோகத்தர்களை கொண்டு குழு ஒன்றினை அமைக்க இந்த கலந்துரையாடலில் தவிசாளர் முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பிரதேச சபை உதவித் தவிசாளர் எம்.ஏ. ஹஸ்ஷார், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜி.பர்ஸாத், டீ.எம். ஐயூப், மௌலவி ஸஹாப்தீன், சபை செயலாளர் எல்.எம்.இர்பான் மற்றும் பிராந்தியத்தில் இயங்குகின்ற பாலர் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

(நூருல் ஹுதா உமர்)






No comments: