புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புறா வளர்ப்பில் ஏற்பட்ட பழைய பிரச்சினையே கொலையில் முடிவடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர், சம்பவம் இடம்பெற்ற செவ்வாய்க்கிழமை (09.03.2021) இரவு கடையாக்குளம் பிரதேசத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வருகை தந்த போது, அங்கு வந்த சிலர் புறா வளர்ப்பில் ஏற்பட்ட பழைய பிரச்சினைகளை முன்வைத்து குறித்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கு குழு மோதல் ஏற்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சந்தேக நபர்கள் மேலும் இருவரை காயப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், புத்தளம் தலைமையகப் பொலிஸாரும் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: