குருவிட்ட-தேத்பனாவ பகுதியில் உள்ள மயான பூமியில் இவரது இறுதி கிரியைகள் இடம்பெற்றதாக எமது செய்தியார் தெரிவித்தார்.
கொழும்பு-டேம் வீதியில் கடந்த 01ஆம் திகதி பயணப்பொதி ஒன்றில் இருந்து பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்த காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர் குருவிட்ட பகுதியை சேர்ந்த பெண் என்பது அடையாளம் காணப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையும் தேடும் பணிகளை காவல்துறையினர் முன்னெடுத்ததுடன், சந்தேக நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரிவந்தது.
இந்நிலையில் இவரின் இறுதி கிரியைகள் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்றது.
அதேபோல் இந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் இவரது இறுதி கிரியைகளும் இடம்பெற்றுள்ளன.

No comments: