(சர்ஜுன் லாபீர்)
அதிமேதகு ஜனாதிபதியின் நாட்டை அழகுபடுத்தும் தேசிய வேலைத்திட்டமான "தொலஸ் மகே பகன" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் சுவரோவியங்களை வரைந்த ஓவிய கலைஞர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று கல்முனை பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.பெளசூல் ஹிபானா தலைமையில் பிரதேச கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிரதேச செயலகம் இணைந்து நடத்திய இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதிகளாக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் எம்.ரீ.ரிம்சான்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.ரம்சான்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி ஜனூபா,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ், சமூர்த்தி உதவி முகாமையாளர் எஸ்.எல்.அஸீஸ் உட்பட கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments: