News Just In

3/22/2021 04:31:00 PM

திருகோணமலையில் சில இடங்களில் ஒரே சமயத்தில் அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்- அவசர கொவிட் செயலணி கூட்டம்இன்று நடைபெற்றது!!


எப்.முபாரக்
திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணி கூட்டம் இன்று(22) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது.

கடந்த சில தினங்களாக திருகோணமலை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் ஒரே சமயத்தில் அதிகளவில் கொவிட் தொற்றாளர்கள். எனவே இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் கொவிட்டிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளி பேணுதல் உட்பட சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.

மாவட்டத்தினுடைய பல பிரதேசங்களில் மக்கள் சுகாதார நடைமுறைகளான முகக்கவசம் அணிதல் போன்ற விடயங்களை தவிர்த்து வருவதாகவும் எனவே இந்த சந்தர்ப்பத்தில் முகக்கவசத்தை கட்டாயமாக அணிவதன் மூலம் குறித்த வைரஸிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு காரணமாக அமையும் என்றும் மாவட்டத்தினுடைய இயல்புநிலை கெடாமல் உரிய செயற்பாடுகளை தங்குதடையின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக அமையும் என்றும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொலிஸ் ,இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரச திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.




No comments: