கழகங்களுக்கிடையிலான இறுதி சுற்றுப்போட்டியில் சன்றைஸ் இளைஞர் கழகமும் ஹிஜ்ரா இளைஞர் கழகமும் தனி மற்றும் இரட்டையர் போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் முதலாம் இடத்தினை இரு பிரிவுகளிலும் சன்றைஸ் இளைஞர் கழகம் பெற்றதுடன் மாவட்ட மட்ட இளைஞர் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற புள்ளிவிபரத்திணைக்கள உத்தியோகத்தரும் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினருமான ஐ. எல். சரிப்டீன், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் எம்.எம். றுக்சான் மற்றும் முக்கியஸ்தர்கள், இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(நூருல் ஹுதா உமர்)
No comments: