நாட்டின் பல பகுதிகளில் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டுவரும் மணல் அகழ்வு நடவடிக்கைகள் காரணமாக சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே நாட்டினன் அபிவிருத்தி பணிகளுக்காக எதிர்வரும் 5 ஆண்டுகளில் 125 கன மீற்றர் மில்லியன் மணல் தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் தற்போது 41 கன மீற்றர் மில்லியன் மணல் மாத்திரமே காணப்படுவதாகவும் புவியியல் மற்றும் சுரங்க பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: