News Just In

3/06/2021 09:25:00 AM

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகள் மீறிய 3307 பேர் கைது!!


தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை மீறி செயற்பட்ட நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி செயற்பட வேண்டும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண வலியுறுத்தியுள்ளார்.

No comments: