News Just In

3/19/2021 07:35:00 AM

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பங்களாதேஷ் இற்கு இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம்!!


பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை பங்களாதேஷ் பயணித்துள்ளார்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸூக்குச் சொந்தமான யூ.எல்-189 எனும் விமானம் ஊடாக இன்று காலை 6.17 அளவில் பங்களாதேஷிற்கு பயணித்துள்ளார்.

அவருடன் தூதுக்குழுவின் எட்டு உறுப்பினர்களும் பங்களாதேஷ் பயணித்துள்ளனர்.

பங்களாதேஷ் நாட்டின் 50 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பிற்கிணங்க பிரதமர் விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பங்களாதேஷ் பயணித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பிரதிநிதிகள்குழுவினர் அங்கு நடைபெறவுள்ள அரச நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமரின் பங்களாதேஷ் விஜயத்தின் போது அந்த நாட்டு பிரதமர் Sheikh Hasinaமற்றும் ஜனாதிபதி Abdul Hamid, அத்துடன் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இதன்போது விவசாயம் கல்வி தொழினுட்பம் சுகாதாரம் கலாசாரம் ஆகியன தொடர்பில்இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

No comments: