ஜெர்மனியின் ஸ்ருட்காட்டை தளமாகக்கொண்ட "உறவுகளுக்கு கரம்கொடுப்போம்" அமைப்பின் நிதியுதவியில், அவ்வமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர் சு.சியாந் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்களோடு கிரான் பிரதேச செயலாளர் சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்களும் கலந்துகொண்டு கழுத்துப்பட்டிகளை மாணவர்களுக்கு அணிவித்தனர்.
ஜெர்மனியின் ஸ்ருட்காட்டை தளமாகக்கொண்டு செயற்பட்டுவரும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பினரால் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் வறிய மாவணர்களுக்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: