கழகங்களுக்கிடையிலான கயிர் இழுத்தல் இறுதி சுற்றுப்போட்டியில் நியூ ஸ்டார் இளைஞர் கழக அணியும் அல் நஜா இளைஞர் கழக அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் வெற்றிபெற்ற நியூ ஸ்டார் இளைஞர் கழக அணி மாவட்ட மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் இரண்டாம் இடத்தினை அல் நஜா இளைஞர் கழகம் பெற்று கொண்டது.
அத்துடன் கழகங்களுக்கிடையிலான எல்ல இறுதி சுற்றுப்போட்டியில் அல் அக்ஸா இளைஞர் கழக அணியும் அரபாத் இளைஞர் கழக அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் வெற்றிபெற்ற அல் அரபாத் இளைஞர் கழகம் மாவட்ட மட்ட விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் அல் அக்ஸா இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தினை தக்கவைத்து கொண்டது.
இப்போட்டிகளுக்கு பிரதம அதிதியாக மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் அலியார் முபாரக் அலி கலந்து கொண்டதுடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் அஸ்வத் அலி உட்பட மேலும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
(நூருல் ஹுதா உமர்)
No comments: