News Just In

3/23/2021 11:55:00 AM

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள டெப் கணினிகளை எடுத்து செல்லுமாறு மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிப்பு!!


பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள டெப் கணினிகளை மாணவர்களுக்கு வினியோகிப்பதற்காக எடுத்துச் செல்லுமாறு கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு மாகாண கல்விப் பணிப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்த டெப் கணினிகளை பாடசாலைகளுக்கு வினியோகிப்பதற்கு ரூ .10 மில்லியனை மதிப்பிட்டுள்ளதால், அதன் பொறுப்பை மாகாண கல்வி பணிப்பாளர்களிடம் ஒப்படைக்க கல்வி அமைச்சு முடிவு செய்திருந்தது. அதன்படி, மேற்கண்ட அறிவிப்புக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

டெப் கணினிகள் முதலில் மேல் மாகாணத்திற்கும் பின்னர் பிற மாகாணங்களுக்கும் வினியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1401 பாடசலைகளுக்காக 96 ஆயிரம் டெப் கணினிகளை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அடுத்த மாத இறுதிக்குள் இவை வினியோகிக்கப்பட்டு முடிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments: