News Just In

3/25/2021 09:03:00 AM

இலங்கையில் கொரோனா நோயளிகளின் எண்ணிக்கை 91 ஆயிரத்தைக் கடந்தது!!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்ப 15 மற்றும் கொலன்னாவ பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. 65 வயதுடைய பெண்ணொருவரும் 76 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 554ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் 253 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனையடுத்து இலங்கையில் பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 91 ஆயிரத்தைக் கடந்து 91 ஆயிரத்து 18 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 87 ஆயிரத்து 630 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 836 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 410 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: