News Just In

3/22/2021 08:02:00 AM

சாரதிகள் போதையில் வாகனம் செலுத்துவதனால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை 80 சதவீதமாக அதிகரிப்பு!!


சாரதிகள் போதையில் வாகனம் செலுத்துவதனால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை 80 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட நிலைமையை அடுத்து போதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை குறைந்தமையே காரணமாகும் என்று தெரிவித்தார்.

வாகனங்களைச் செலுத்தும் போது ஏற்படும் தவறுகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணம் 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமையைத் தொடர்ந்து போதையில் வாகங்களைச் செலுத்துவோரால் ஏற்படும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 50 சதவீதமான குறைந்துள்ளது.

போதையில் வானகம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசேட நடவடிக்கையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை அதிகரிப்பதற்கு பொலிசார் தீர்மானித்துள்ளனர்.

No comments: