News Just In

3/25/2021 09:53:00 AM

நேற்று மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 552ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று(2021.03.24) உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 552 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரும் கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments: