News Just In

3/25/2021 01:20:00 PM

மட்டக்களப்பு- ஏறாவூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் 50 ஆண்டு நிறைவு பொன் விழா!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொன் விழா நிகழ்வும், ஊழியர்களுக்கான மிகை ஊதியம் வழங்கும் நிகழ்வும் புதன்கிழமை 24.03.2021 சங்கத் தலைவர் அல்ஹாஜ் எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இன்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம். அஸ்மி அங்கு உரையாற்றுகையில் கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் செயற்பட்டு வந்தபோதிலும் ஏறாவூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கமானது முன்மாதிரியாகி இயங்கி பல செயற்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. அதில் கூட்டுறவு வத்தியசாலை சிறந்த முன்மாதிரியாகும்.

ஏறாவூர் சங்கத்தின் இயக்குனர் சபையானது படித்த சமூகத்தவர்களைக் கொண்டு சிறந்த முறையில் எவ்வித ஊழல்களும் அற்ற விதத்தில் முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டே செல்கின்றது. இது ஏனைய சங்கங்களுக்கு ஒரு முன்மாதிரியாகும்.” என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஏ. தங்கவேல் ஆகியோருட்பட இன்னும் பல அதிகாரிகளுடன் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சங்க இயக்குனர் சபை உறுப்பினர்கள், சங்க பணியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.










No comments: